tamilnadu

img

காமராஜர் பல்கலைக்கழகத்தில் முறைகேடு சிபிஐ விசாரிக்க வாய்ப்பு

மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி தேர்வு முறைகேடு, விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு ஆகியவற்றை சிபிஐ விசாரிக்கபல்கலைக்கழக விசாரணைக் குழு ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் கேரளத்தில்உள்ள மூன்கறு மையங்களில் பயின்ற மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வு எழுதி தேர்வில் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது. இதற்கு பல்கலைக் கழக அதிகாரிகள், ஊழியர்கள்உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரிக்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. கேரள மையங்களில் நடைபெற்ற முறைகேடுதொடர்பாக விசாரணைக்குழுவினர் தேர்வுத்துறை ஊழியர்கள்உள்பட 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து விசாரணை அறிக்கை துணை வேந்தரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

விசாரணைக்குழு அறிக்கை தொடர்பாக பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் கூறும்போது, “விசாரணைக்குழு நடத்திய விசாரணையில் மோசடி குறித்து தெரிய வந்தாலும் இதில் உள்ள முழுத் தொடர்புகளையும் கண்டறிய முடியவில்லை. பல்கலைக் கழகப் பணியாளர்கள் பலருக்கும் இதில்தொடர்பு உள்ளது.எனவே கேரள மையத்தில் நடைபெற்ற முறைகேடு, மறுமதிப்பீடு முறைகேடு உள்ளிட்டவற்றை சிபிஐ மூலம் விசாரிக்கலாம் எனவிசாரணைக்குழு பரிந்துரைசெய்துள்ளது”. விசாரணைக் குழுவின் அறிக்கை தமிழக ஆளுநர், அரசின் உயர்கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநரிடமிருந்து அனுமதி கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றனர்.