சென்னை,மே.15- பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நீதி கேட்டு போராடிய இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்தது அன்றைய அதிமுக அரசு.
இப்போதும் அந்த வழக்குகள் தொடர்வது நியாயம் இல்லை. ஆகவே அவர்கள் மீதான வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற தமிழ்நாடு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.