tamilnadu

img

ஊரடங்கு நிவாரணமாக தமிழக அறிவித்த நிவாரணத் தொகை

ஊரடங்கு நிவாரணமாக தமிழக அறிவித்த நிவாரணத் தொகையை 3 மாதமாகியும் நலவாரியங்கள் வழங்காமல்  உள்ளன. எனவே, நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு உடனே வழங்கவும், நிவாரண நிதி பெற்றவர்களின்  பட்டியலை வெளியிடக்கோரி  திங்களன்று (ஜூன் 15) சென்னை மாவட்ட நலவாரிய அலுவலகத்தை சிஐடியு நிர்வாகிகள்  முற்றுகையிட்டனர். தமிழ்நாடு தையல் தொழிலாளர் சம்மேளனத் தலைவர் பி.சுந்தரம், ஆட்டோ தொழிலாளர்  சம்மேளன செயல்தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் மணிமேகலை உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.