ஜிப்மரில் தொழில்நுட்பக் கோளாறு 4 மணிநேரம் நோயாளிகள் அவதி
புதுச்சேரி, ஜன. 7- புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கணினி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்தப் பரிசோதனை செய்ய வந்த நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து அவதியுற்றனர். தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற வரும் நிலையில், புதன்கிழமை காலை 8 மணி முதல் ரத்தப் பரிசோதனைப் பிரிவில் கணினிகள் வேலை செய்யவில்லை. இதனால், தைராய்டு பரிசோதனைக்காக உணவு அருந்தாமல் வந்திருந்த நோயாளிகள் மதியம் 12 மணி வரை காத்திருக்க நேரிட்டது. நீண்ட நேரக் காத்திருப்பால் சில நோயாளிகள் மயக்கமடைந்தனர். இது குறித்து விளக்கமளித்த ஜிப்மர் நிர்வாகம், தொழில்நுட்பக்
