2021, 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
திரைக்கலைஞர்கள் எஸ்.ஜே.சூர்யா, சாய்பல்லவி மற்றும் இயக்குநர் லிங்குசாமி ஆகியோருக்கு 2021ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது
திரைக்கலைஞர் விக்ரம் பிரபு, பாடலாசிரியர் விவேகா ஆகியோருக்கு 2022ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைக்கலைஞர்கள் மணிகண்டன், ஜார்ஜ் மரியான், இசையமைப்பாளர் அனிருத், பின்னணி பாடகர் ஸ்வேதா மோகன், நடனக்கலைஞர் சாண்டி, சண்டை பயிற்சியாளர் சுப்புராயன் ஆகியோருக்கு 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சின்னத்திரை நடிகர்கள் “மெட்டி ஒலி” காயத்ரி மற்றும் பி.கே. கமலேஷ்க்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் கலை வித்தகர்களுக்கான சிறப்பு விருதுகளான பாரதியார் விருது எழுத்தாளர் ந.முருகேச பாண்டியனுக்கும், எம்.எஸ்.சுப்புலெட்சுமி விருது பாடகர் யேசு தாஸுக்கும், பாலசரசுவதி விருது சதிராட்ட கலைஞர் முத்து கண்ணாமாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.