tamilnadu

தமிழக பட்ஜெட் உரை... 1ஆம் பக்கத்தொடர்ச்சி....

 1ஆம் பக்கத்தொடர்ச்சி... 

இத்திட்டம் மிகவும் ஏழ்மையானவர்களுக்கான திட்டமாகும். கோவிட் பெருந்தொற்றின் போது, மாநிலத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 4 ஆயிரம் வழங்கப்பட்டது. இத்தகைய நிதியுதவியை பணக்காரர்களுக்கும், சம்பளம்வாங்கும் மக்களுக்கும் வழங்கக்கூடாது என்ற விமர்சனங்களும் வழக்குகளும் எழுந்தன. ஏழை மக்களுக்கு அடிப்படை உரிமைத்தொகை சென்றடைவதை உறுதி செய்வதற்காக, வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து இத்திட்டத்திற்கான தகுதி
வாய்ந்த குடும்பங்களைக் கண்டறிய, தேவைப்படும் அளவுகோல்கள் மற்றும் வழிமுறைகளை இந்த அரசு வகுத்து வருகிறது. இந்த வழிமுறைகள் பெருமளவில் விளம்பரப்படுத்தப்படும். தகுதிவாய்ந்த குடும்பங்களைக் கண்டறிந்தபின், இத்திட்டத்தை அரசு திறம்படச் செயல்படுத்தும் என்றும் அறிவித்தார்.

போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசல் மானியமாக ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். புதிதாக பேருந்துகள்வாங்க ரூ.623.59 கோடி, மகளிர் இலவச பயணத்திற்கு ரூ.703 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899.17 கோடி ஒதுக்கப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட தலைமையகத்துடன் இணைக்க 2,200 கிலோமீட்டருக்கு நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்படும். பெண் அரசு ஊழியர்களின் மகப்பேறுவிடுப்பு 12 மாதமாக உயர்த்தப்பட்டது.

ரூ.58,692.68 கோடி பற்றாக்குறை
2021-22 ஆம் ஆண்டின் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வரவு ரூ. 2,02,495.89 கோடி. ஆனால், 2021-22 ஆம் ஆண்டில் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வருவாய்செலவினம் ரூ.2,61,188.57 கோடியாகும். இதனால் திமுக அரசுரூ.58,692.68 கோடிக்கு வருவாய் பற்றாக்குறையுடன் நிதிநிலைஅறிக்கையை தாக்கல் செய்தது.நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு நிதிதுறையின்கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,“ நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளபெட்ரோல் விலை குறைப்பு வெள்ளிக்கிழமை(ஆக.13) நள்ளிரவுமுதல் அமலுக்கு வருகிறது என்றார்.