இந்தி திணிப்பை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து இன்று (பிப்.25) தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மாணவர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுங்கவரி அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் (SFI), திமுக மாணவரணி உள்ளிட்ட மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
யு.ஜி.சி. வரைவுக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும், மும்மொழிக் கொள்கையை திணிக்கும் தேசியக் கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.