tamilnadu

img

சீருடை, பழைய பாஸ் இருந்தால் பேருந்துகளில் பயணிக்க  மாணவர்களுக்கு அனுமதி.... போக்குவரத்து அமைச்சர் பேட்டி....

சென்னை:
10, 12-ம் வகுப்பு மாணவர்கள் சீருடை, பழைய பாஸ் இருந்தால் பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

மின்சார பேருந்து போக்குவரத்து திட்டம் எந்த வகையிலும் கைவிடப்படாது. கொரோனா காலத்தில் கடந்த மாதங்களில் அதற்கான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ‘பார்ம்-2’ என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அதில் மின்சார பேருந்துகளுக்கு மானியம் கொடுத்தார் கள். இப்போது அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.அதன் பின்னர் நாட்டிலேயே முதல் முறையாக சி40 என்ற ஒப்பந்தத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டுள்ளார். அதன்படி ஜெர்மன் ‘கே.எப்.டபுள்யூ.’ வங்கியில் இருந்து கடன் உதவி பெற்று மின்சார பேருந்து போக்குவரத்தும், பி.எஸ்.-6 ரக பேருந்துகளுக்கும் ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சீருடை மற்றும் பழைய பஸ் பாஸ் வைத்திருந்தால் போதும். அவர்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றார்.