திருவண்ணாமலை, ஆக. 30- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாமண்டூர் கிராமத்தில், கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது இடத்தை சிலருக்கு பட்டா வழங்கிய வருவாய்த்துறை மற்றும் கோட்டாட்சியரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர்கள் சண் முகம், சேட்டு ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ப.செல்வன் மாவட்டக் குழு உறுப்பினர் ந.சேகரன், வந்தவாசி ஜா.வே.சிவ ராமன், பெ.அரிதாசு, டி. வெங்கடேசன், சோலை பழனி, வெ.சங்கர், ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் வட்டாட்சியர் தனி நபருக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்ய வேண்டும், அந்த இடத்தில் தற்போது நடை பெற்று வரும் கட்டுமானப் பணிகளை நிறுத்தி, பொது சொத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.