tamilnadu

img

கடலூரில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

கடலூரில்  வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

கடலூர், மே 14- தொழிலாளர் நல சட்டங்கள் நான்கு தொகுப்புகளையும் ரத்து செய்ய வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிற்சங்க பதிவிற்காக மனு செய்தால் 45 நாட்களுக்குள் பதிவு செய்வதை கட்டாயமாகக் வேண்டும், முறைசாரா தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்து உள்ளவர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மே 20 ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தத்தை கடலூர் மாவட்டத்தில் வெற்றிகரமாக வேலை நிறுத்த ஆயத்த மாநாடு புதுப்பாளையத்தில் தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் பா.திருமாவளவன் தலைமையில் நடை பெற்றது. சிஐடியு மாநில துணைத் தலைவர் பி. கருப்பையன், மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், மாநிலக் குழு உறுப்பினர் கே.சாவித்திரி, என்எல்சி சிஐடியு சங்க பொதுச் செயலாளர் எஸ்.திருஅரசு, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் வி.குளோப், மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.குணசேகரன், எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் பி.சரவணன், ஐஎன்டியுசி மாவட்ட கவுன்சில் தலை வர் கே.மனோகரன், பொருளாளர் ஏ.ஆனந்தன், எல்எல்எப் மாநில அமைப்புச் செயலாளர் பால. ஜெயபிரகாஷ், மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்மணி, உள்ளாட்சித் துறை மாவட்ட செயலாளர் ஆர்.மகேஷ் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.