எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் ஆகியவை இணைந்து பருவ நிலை மாற்றம் குறித்தான வட்டமேசை கருத்தரங்கை பல்கலைக் கழக வளாகத்தில் நடத்தின. யூ.ஜி.சியின் துணைத்தலைவர் பேராசிரியர் பூஷன் பட்வர்தன் மற்றும் பேராசிரியர் பூனியா ஆகியோர் கருத்துரை வழங்கினர். எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் நிறுவனர் வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர், துணை வேந்தர் டாக்டர் சந்தீப் சன்செட்டி, பதிவாளர் டாக்டர் நா.சேதுராமன் மற்றும் பல்வேறு பல்கலைக் கழக பேராசிரியர்கள் ஆராச்சியாளர்கள் கலந்துகொண்டனர்.