tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

பெயர் சேர்ப்புக்கு இதுவரை 12.27 லட்சம் பேர் விண்ணப்பம்!

சென்னை, ஜன. 9 - தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிட்டபின் இதுவரை 12 லட்சத்து 27 ஆயிரத்து 321  பேர், தங்களின் பெயர்  சேர்க்க, நீக்க விண்ணப்பங் களை அளித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டிய லில் ஆட்சேபனை குறித்து 21,273 பேர், படிவம் 7 விண் ணப்பத்தை சமர்ப்பித்துள்ள னர். எஸ்.ஐ.ஆர். பணி மூலம் தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்களை நீக்கி வரைவு வாக்காளர் பட்டிய லை தேர்தல் ஆணையம்  வெளியிட்டிருப்பது குறிப் பிடத்தக்கது.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு  கனமழை தொடரும்!

சென்னை, ஜன. 9 - தமிழகத்தில் 2 நாள் களுக்கு கனமழை தொட ரும் என்றும் ஒருசில மாவட்டங்களில் மிக  கனமழைக்கு வாய்ப்புள்ள தாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை (ஜன. 10) திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புது வை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக  கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

ஜனநாயகன் படத்தை வெளியிட  சென்னை உயர்நீதிமன்றம் தடை!

சென்னை, ஜன. 9 - நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்துக்கு 16 வயதுக்கு மேற்பட்டோர் பார்ப்பதற் கான யு/ஏ தணிக்கைச் சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி பி.டி. ஆஷா புதன்கிழமையன்று காலை உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறை யீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறை யீட்டு மனு, புதன்கிழமையன்று பிற்பகலே தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்ஸவா, நீதிபதி ஜி. அருள்முருகன் தலைமை யிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தணிக்கைச் சான்றிதழ் பெறாமல், படத்தை வெளியிடும் தேதியை எவ்வாறு முடிவு செய்தீர்கள். ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டீர்கள் என்பதற் காக உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டுமா? என்று படத் தயாரிப்பு தரப்புக்கு கேள்வி எழுப்பி நீதிபதிகள், பல்வேறு நடைமுறைகள் உள்ளபோது சான்றுக்காக பொறுமை யாக காத்திருக்க வேண்டும் என்று கூறியது டன், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை  விதித்து, அடுத்த விசாரணை ஜன. 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  இதனால், பொங்கல் திருநாளை யொட்டி ஜனநாயகன் படம் திரைக்கு வருவது சிக்கலாகியுள்ளது.