நாட்டிலேயே அதிகமாக புயல் உருவாகும் கடல் பகுதியாக தமிழ்நாட்டின் தெற்கு வங்கக் கடல் உள்ளது. தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் இடைப்பட்ட வங்கக்கடல் பகுதிகளில் அதிகமாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, பின்னர் புயலாக மாறும். இவ் வாறு உருவாகும் புயல் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் என 4 மாநி லங்களில், ஏதாவது ஒரு மாநிலத்திற்குள் புகுந்து கரையை கடக்கும்.
கணிக்க முடியாத பெஞ்சால்
வங்கக்கடலில் உருவான காற்ற ழுத்த தாழ்வு மண்டலம், வலுப்பெற்று புயலாக உருவானது. இதற்கு ‘பெஞ்சால்’ என பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் சனிக்கிழமை இரவு மாமல்ல புரம் - காரைக்கால் இடையே புதுச்சேரி யில் கரையை கடந்தது. பெஞ்சால் புய லால் புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்க ளில் அதீத அளவில் பலத்த மழையும், சென்னை, கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் கொட்டித் தீர்த்தது.
இதனால் தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கிறது. பெஞ்சால் புயல் கணிக்க முடியாத அளவிற்கு போக்கு காட்டி யது. இந்த புயலை சாதாரண காற்ற ழுத்த தாழ்வு நிலை என்று தான் இந்திய வானிலை மையம் அறிவித்தது. ஆனால் திடீரென வலுவான புயலாக மாறியது. புயல் நகரும் திசையையும் சரியாக கணக்கிட முடியவில்லை. 4 நாட்களுக்கு முன் சென்னைக்கு அருகே மணிக்கு 10 கிமீ வேகத்தில் பெஞ்சால் புயல் நகர்ந்தது. இதனால் பெஞ்சால் புயல் சென்னை அல்லது ஆந்திராவில் கரை யை கடக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் கூறியது. ஆனால் அடுத்த 24 மணிநேரத்தில் திடீரென திசை திரும்பிய பெஞ்சால் புயல் மாமல்ல புரம் நோக்கி நகர்ந்தது. ஆனாலும் புய லின் நகர்வு வேகம் கணிக்க முடிய வில்லை. புயலின் கண் பகுதியும் தெரி யாததால் வானிலை ஆய்வு மையங்கள் திணறின. இறுதியாக புயல் புதுச்சேரி யில் கரையை கடந்தது. ஆனாலும் 8 மணி நேரம் பெஞ்சால் புயல் புதுச்சேரிலேயே மையம் கொண்டு இருந்தது.
மோடி அரசின் அலட்சியம்
பெஞ்சால் புயல் தொடர்பான செய்தி தேசிய அளவில் டிரெண்ட் ஆனாலும் இது தொடர்பாக மோடி அரசு வாய்திறக்க வில்லை. இந்திய நாட்டின் பேரிடர் துறை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அமித் ஷா அமைச்சராக பொறுப்பேற்றப் பின் ஒருமுறை கூட புயல், நிலச்சரிவு என பேரிடர் முன்னெச்சரிக்கை தொடர் பாக ஒருமுறை கூட பேசியது இல்லை. புயல், நிலச்சரிவு போன்றவைகள் மாநில அரசு தான் கையாள வேண்டும் என மோடி அரசு கைவிட்டது போலவே தெரிகிறது.
சமீபத்தில் வயநாடு நிலச்சரிவின் பொழுது அமித் ஷா நாடாளுமன்றத்தில், நாங்கள் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தோம் என கட்டுக்கதைகளை அள்ளி வீசினர். ஆனால் அமித் ஷா கூறி யது பொய் என தேசிய பேரிடர் மேலா ண்மை போட்டுடைத்தது என்பது குறிப்பி டத்தக்கது.