tamilnadu

img

மாணவிக்கு பாலியல் தொல்லை - மாணவர் சங்க போராட்டத்தால் பேராசிரியர் சஸ்பெண்ட்!

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் ஞானவேல் பாபு என்பவர் மீது மாணவி ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர் சங்கத்தினர் இன்று காலை பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து முதற்கட்ட நடவடிக்கையாகப் பேராசிரியர் ஞானவேல் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.