சென்னை:
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளதாக சனிக்கிழமையன்று (ஆக.22) மருத்துவமனை தரப்பில் வெளியான புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘‘எஸ்.பி.பி.யின் ரத்தத் தில் ஆக்சிஜன் அளவு குறைந் துள்ளதால் வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. எக்மோ சிகிச்சையால் உடல் நிலை சீராக உள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளார். அவருக்கு 16 நாட்களாக தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை மோசம் அடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தி தேசிய மற்றும் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையுடன் மருத் துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.