tamilnadu

img

எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
நாட்டின்  24 மொழிகளில் வெளியாகும் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்றவற்றுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி  விருது வழங்கப்படுகிறது.  மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி  விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. கன்னட மொழிக்கு மட்டும் விருது மட்டும் அறிவிக்கப்படவில்லை.
மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நாவலை கேவி ஜெயஸ்ரீ தமிழில் மொழி பெயர்த்தார். வம்சி பதிப்பகம் இதனை வெளியிட்டது. சங்க காலப் பாணர், கூத்தர்களின் ஆற்றுப்படையாக உரைநடையில் வந்துள்ள இந்நாவல், பாரியின் படுகொலையைக் கதைக்களனாகக் கொண்டது. 
இந்த நாவல் மொழிபெயர்ப்புக்காக தமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டின் தமிழ் மொழிக்கான விருதுக்கு  சூல் நாவல் எழுதிய எழுத்தாளர் சோ. தர்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.