சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.சமுத்திரம் நினைவு அரசு நூலகம் அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் கிராம தண்ணிறைவு திட்டத்தின் கீழ் சு.சமுத்திரம் குடும்பத்தினரின் பங்களிப்புடன் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி முதன்மை இயக்குநர் ஆ.பழனி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்தார். இதில் தமுஎகச மாநில துணைத்தலைவர் இரா.தெ.முத்து, மாவட்டத் தலைவர் நாறும்பூநாதன், பிரியாபாபு ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். நிகழ்ச்சியில் கோகிலா சமுத்திரம், மகள் அமுதா ரமேஷ், மகன்கள் சிவக்குமார், கார்த்திகேயன் உள்ளிட்ட கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.