சென்னை:
சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் கே.வி. ஜெயஸ்ரீக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் தமிழக சங்க இலக்கியங்களின் காட்சிகளை மையமாக வைத்து அவர் எழுதிய நூலை, நாவலாக “நிலம் பூத்து மலர்ந்தநாள்” என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த் ததற்காக எழுத்தாளர் திருமதி கே.வி. ஜெயஸ்ரீஅவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி விருது பெரும் தமிழக பெண் எழுத்தாளர் என்ற பெருமையும் இவரைச் சாரும். இந்த விருதினை பெற்று தமிழகத்திற்கும், தமிழ் இலக்கியத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். எழுத்தாளர் ஜெயஸ்ரீ அவர்களுக்குமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மலையாள மொழியிலிருந்து மிகச்சிறந்தபடைப்புகளை தொடர்ந்து தமிழ் மொழியில் மொழிபெயர்த்து வெளியிடும் பணியினை மேற்கொள்ளும் அவரின் பணி தமிழிலக்கிய உலகில் மிக முக்கியமானதாகும். இலக்கிய உலகின் மிக உயர்ந்த விருதைபெற்றிருக்கும் இத்தருணத்தில் அவரைபாராட்டுவதோடு, அவரின் எழுத்துப்பணியும், இலக்கிய படைப்பாக்க பணியும் மென்மேலும் சிறந்து விளங்கிட வேண்டுமெனவும் வாழ்த்துகிறோம்.