சிதம்பரம்,அக்.11- கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே திருநாரையூர் கிராமத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் 1 கோடி ரூபாய் செல வில் கட்டப்பட்ட பள்ளி கட்டி டத்திற்கு சாலை வசதி அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டியும், மயானத்திற்கு செல்ல சாலை அமைத்து தரக்கோரியும் குமராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் கோப மடைந்த மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை மையில் சிதம்பரம்-காட்டு மன்னார்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் திரு நாரையூர் பேருந்து நிறுத்தத் தில் ஒன்று திரண்டர். சம்பவ இடத்துக்கு வந்த காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் தமிழ்ச் செல் வன், குமராட்சி வட்டார வளர்ச்சி அதிகாரி, காவல் துறையினர் அமைதி பேச்சு நடத்தினர். அப்போது, பத்து நாட்களில் உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர். இதனை தொடர்ந்து மறியல் போராட் டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பி னர் ராமச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் கற்பனைச் செல்வம், குமராட்சி ஒன்றி யச் செயலாளர் மூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் புஷ்பராஜ்,முனுசாமி, பாலமுருகன் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.