செங்கல்பட்டு, ஆக.27- காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு ரயில் நிலையம் தென்மாவட்ட ங்களை சென்னையுடன் இணைக்கும் முக்கிய ரயில் முனையமாக உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு அதன் சுற்றுப்புற கிராம மக்கள் பல்வேறு அலுவலக பணிகளுக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் செங்கல்பட்டு ரயில் நிலையத்தை பயன்படுத்து கின்றனர். இப்படி செல்ப வர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை ரயில் நிலையம் அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு, ரயில் மூலம் சென்னைக்கு சென்று திரும்புகின்றனர். ஆனால், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த போதிய இடவதி யில்லை. இதனால் வாகனங்களை ரயில் நிலைய வளாகத்தின் சாலை யோரங்களிலேயே நிறுத்திச் செல்கிறார்கள். இதனால், ஜிஎஸ்டி சாலையில் இருந்து ரயில் நிலையத்துக்குள் செல்ல பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும், காலை, மாலை நேரத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், ரயில் நிலைய வளாகத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, வாலி பர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.புருஷோத்த மன் கூறுகையில், ரயில் நிலையத்தில் நான்கு இடங்க ளில் வாகன நிறுத்துமிடம் இருந்தும், இடநெருக்கடி ஏற்படுகிறது. மேலும் பயணிகள் நடந்து செல்லும் பாதையில் கூட வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பாத சாரிகளுக்கு இடையூறாக உள்ளது. ஏதாவது அவசர உதவி என்றால் கூட ஆம்புலன்ஸ் வாகனம் ரயில் நிலையத்திற்கு செல்ல முடிவதில்லை. எனவே நவீன தொழில்நுட்ப வசதியு டன் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும்” என்றார். இதுகுறித்து, செங்கல்பட்டு ரயில் நிலைய மேலாளர் சுரேஷிடம் கேட்ட போது,‘ பயணிகளை தவிர்த்து வெளிநபர்களும் ரயில் நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவ தால் இடநெருக்கடி ஏற்படு கிறது. இவற்றை சரி செய்திட ரயில்வே காவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது குறித்து பயணிகளும் மின்ன ஞ்சல் மூலம் செங்கல்பட்டு ரயில்வே கோட்ட மேலாள ரிடம் புகார் தெரிவித்துள்ள னர். எனவே விரைவில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்’ என்றார்.