tamilnadu

img

விழித்திரை அறுவை சிகிச்சை சென்னையில் மருத்துவ மாநாடு

சென்னை, ஏப். 21-விழித்திரை அறுவைசிகிச்சை மீதான இந்தியாவின் மிகப்பெரிய மாநாடான ரெட்டிகான் 9-வது பதிப்பு சென்னையில் ஞாயிறன்று (ஏப்.21) நடைபெற்றது.இதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோ`ஹித் தொடங்கிவைத்தார். டாக்டர். அகர்வால்ஸ் கண்மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் அமர் அகர்வால், டாக்டர் ஆதித்யா அகர்வால் மற்றும் டாக்டர் சுனிர் கார்க் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து விழித்திரை அறுவை சிகிச்சையில் சிறப்பு நிபுணர்களான 600-க்கும் அதிகமானவர்கள் இதில் கலந்துகொண்டனர். விழித்திரை ஆய்வுகள் மீதான தகவலை பரிமாற்றம் செய்யவும் மற்றும் அடுத்த தலைமுறைக்கான பார்வைத்திறன் ஆராய்ச்சியை முடுக்கிவிடவும் இம்மாநாடு நடைபெற்றது. விழித்திரை பாதிப்பு அதனை போக்க மேற்கொள்ளவேண்டிய நவீன சிகிச்சைகள், சமீபத்திய மருத்துவ தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்து இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் விவாதித்தனர்.விழித்திரை நோய் பாதிப்பு அறிகுறிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அறிந்து கொள்ள கண் மருத்துவர்களுக்கும் இத்துறையில் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கும் தனி அரங்கு நடத்தப்பட்டது.2020 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பார்வையற்ற நபர்களின் எண்ணிக்கையானது, ஒருகோடியே 15லட்சமாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக மாநாட்டில் தாமஸ் ஜெஃப்பர்சன் பல்கலைக்கழக பேராசிரியர் சுனீர் ஜெ.கார்க்க்கு ஆளுநர்பன்வாரிலால் புரோஹித் ரெட்டிகாண் 2019 தங்கப்பதக்கத்தை வழங்கிப் பாராட்டினார்.