சென்னை,டிச.6- தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி யுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செவ்வா யன்று மாலை தென் கிழக்கு வங்கக்கடல் பகுதி யில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும். பிறகு இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவ டைந்து 8-ந்தேதி காலை வடதமிழக கடலோரப் பகுதி யின் அருகில் வந்தடையக் கூடும் என்று அந்த மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கனமழை யினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக் கைகளையும் மேற்கொள்ளு மாறு சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் தொடர் புடைய மாவட்ட ஆட்சிய ருக்கு அறிவுரைகள் வழங் கப்பட்டுள்ளது. மேற்கு கடற்கரைப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றுள்ள 532 மீன்பிடி படகுகள் பாது காப்பாக உள்ளன. கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள 93 மீன்பிடி படகு களில் உள்ள மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் செவ்வாயன்று கரைக்குத் திரும்பினர். மேலும், மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத் தப்பட்டுள்ளது. அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர்வரத்து ஆகியவை தொடர்ந்து கண் காணிக்க வேண்டும். உபரி நீர் வெளியேற்றும்போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.