சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் காவிரிப் படுகையை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் வகையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என காவிரிப் படுகை கூட்டியக்கம் சார்பில் திமுக விவசாய அணி மாநிலச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட 12 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகி கள் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் நலனையும், தமிழக விவசாயிகளின் நலன்களையும் பாதுகாப்பதில் திமுக சிறப்பான பணியை ஆற்றியிருக்கிறது. அதே போல் இப்போது காவிரி படுகைக்கு வந்திருக்கிற ஆபத்தில் இருந்து மக்களையும், விவசாயி களையும் பாதுகாக்க தாங்கள் வலுவாக தலையிட்டு உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்து கொண்டிருக்கிற காவிரி படுகையை மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்திருப்பதை தாங்கள் அறி வீர்கள். ஏற்கனவே காவிரியில் பாசனத்திற்கு கர்நாடகத்திலிருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறந்துவிடப்படாத காரணத்தால் வேளாண்மை பொருளாதாரம் சரிவை சந்தித்துக் கொண்டிரு க்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகள் எதையும் ஏற்று அமல்படுத்தாமல் கர்நாடக மாநில அரசு உதா சீனப்படுத்தி வருகிறது. இந்த நிலை குறித்து மத்திய, மாநில அரசுகள் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.
இந்நிலையில், காவிரிப் படுகையில் பெட்ரோலிய ரசாயனப் பொருட்களை எடுப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் காவிரிப் படுகையில் மீத்தேன் எடுப்பதற்கு தடைவிதித்து அரசாணை எண். 186/8.12.2015இல் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் மாநில அரசின் தடை உத்தரவை அலட்சியம் செய்து மத்திய அரசு செயல்படுகிறது.கடந்த மார்ச் 2016இல் மத்திய அரசால் புதிய எண்ணெய்எடுப்புக் கொள்கை அறிமுகப்படுத்தப் பட்டது. இதன் மூலம் ஒற்றை அனுமதி பெற்றுக்கொண்டு கச்சா எண்ணெய், மீத்தேன், ஷேல், டைட் கேஸ் உள்ளிட்ட எந்த வகையான எண்ணெய் மற்றும் எரிபொருட்களை எடுப்பதற்கு வழிவகை செய்யப் பட்டுள்ளது. மேலும் கடந்த 1.8.2013 அன்று நடைபெற்ற மத்திய மந்திரி சபைக் கூட்டத்தில் கடந்த 2016க்கும் முந்தைய கச்சா எண்ணெய் எடுக்கக்கூடிய இடங்களுக்கும் இந்த ஒற்றை அனுமதி முறை விரிவுபடுத்தப் பட்டுள்ளது.
மேற்கண்ட பெட்ரோலிய ரசாயன வாயுவை எடுப்பதற்கு ஹைட்ரோ பிராக்கிங் நடைமுறையை பயன்படுத்தஇருக்கிறார்கள். இதற்கு அமெரிக்கா வின் ப்ளேட் எனர்ஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஹைட்ரோ பிராக்கிங் முறையில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்குஅனுமதித்தால் காவிரிப்படுகையில் பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்என்று பல்வேறு ஆய்வாளர்களும், ஏற்கனவே தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவும் தெரி வித்துள்ளது. குறிப்பாக, பிராக்கிங் நிகழ்வின் போது குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு நிலத்தடி நீர் பாழடையும். நில அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. மக்கள் நெருக்கமும், தொன்மையான கோயில்கள் போன்றவையும் அதிகமுள்ள காவிரிப்படுகையில் இதை அனுமதிப்பது சரியாக இருக்காது. பிராக்கிங் முறைக்கு பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் குறிப்பாக உயிர்க்கொல்லி போன்றவை விவசாயத் திற்கும், மனிதர்களுக்கும் ஊறு விளைவிக்கும். உற்பத்தியின் போது வெளியேறும் நீர் மிகுந்த அள விலான உப்புகளும் ஏனைய வேதிப் பொருட்களும் நிரம்பியது. இதுசெயற்கையான குளங்களில் பாதுகாக்கப்படுவதால் நிலவளம் பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்து போகும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.
இத்தகைய பாதிப்புகளால் உணவு தானிய உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்படும். மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும். மக்கள் வாழவழியின்றி, குடிக்க நீரின்றி, காவிரிப் படுகையை விட்டு காலப்போக்கில் வெளியேறும் அவல நிலைக்கு ஆளாவார்கள். எனவே காவிரி படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து பாதுகாக்க வேண்டியதுஅவசர அவசியமாகும். எனவே தமிழக சட்டப்பேரவையில் காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் வகையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிட தாங்கள் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
காவிரி டெல்டாவில் விவசாயப் பணிகளை துவங்குவதற்கு ஏதுவாக காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவு படி ஜூன், ஜூலை மாதத்திற்கு தமிழகத்திற்குரிய தண்ணீரை பெறவும், மாநிலம் முழுவதும் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.உடன் வே.துரைமாணிக்கம், எஸ்.குணசேகரன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்), அக்ரி கா.பசுமை வளவன் (விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்), கே.பாலகிருஷ்ணன் (வாழ்க விவசாயி கள் சங்கம்), மு.சேரன் (விவசாய சங்கங்களின் கூட்டியக்கம்), தனபாலன் (காவிரி விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம்), பால அருட்செல்வன் (திமுக விவசாய அணி), வி.சுப்பிர மணியன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்), டி.ரவீந்திரன் (தமிழ்நாடு கரும்பு விவ
சாயிகள் சங்கம்) ஆகியோர் இருந்த னர்.