tamilnadu

வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டோர் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரலாம்

சென்னை,ஏப்.21 வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டதால் வாக்களிக்க முடியாமல் போனவர்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விளக்கங்களை கோரவும், அதன் மூலம் நீதிமன்றத்துக்கு சென்று இழப்பீடு கோரவும் சட்டத்தில் வழிவகை உள்ளது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் சிலர் வாக்களிக்க முடியாமல்போனது. வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நூற்றுக்கணக்கானோர் வாக்களிக்கமுடியாமல் போன விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோல், தமிழகம்முழுக்க பரவலாக பல்வேறு வாக்குச்சாவடிகளிலும் பிரச்சனை எழுந்தது.வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டதால் ஜனநாயக கடமையை ஆற்ற முடியாதவர்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் உரிய விளக்கங்களை கோரி, நீதிமன்றங்களில் இழப்பீடு கேட்டுவழக்கு தொடரவும், எவ்வித முகாந்திரமும் இல்லாமல் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வழியுள்ளதாக, வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:எவ்வித காரணமும் இல்லாமல் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கியிருந்தால், அது அரசுத்துறை அதிகாரிகளின் சேவை குறைபாடாகும்.


வாக்காளர் பட்டியலில் தனது பெயர் நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் வாக்காளர் ஒருவர் கோரலாம். வாக்காளர்கள் தங்கள் வாக்காளர்அடையாள அட்டை எண்ணை குறிப்பிட்டு, மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல்களை கோரலாம். இதற்கான செலவு 10 ரூபாய்தான் என்றார் அவர்.வாக்காளர் பட்டியல் நகலை தரவும் பெயர் எந்த தேதியில் நீக்கப்பட்டுள்ளது. தேதி,மாதம், வருடம் தருக. வாக்காளர் பெயர்நீக்கம் செய்யப்பட்டதற்கு குறிப்பிடப்பட்டுள்ள காரணம் அடங்கிய விவரம் மற்றும் அதன் நகல் தருக. உள்ளிட்ட தகவல்களை சம்மந்தப்பட்டவர் கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.வழக்கு தாக்கல் செய்யலாம்தகவல்கள் கிடைத்ததும் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள், ஆவணங்களின் அடிப்படையில் தவறுதலாக மற்றும் போலியான ஆவணங்களை, போலியான தகவல்களை கொடுத்து உங்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை ஊர்ஜிதம் செய்து, பெயர் நீக்கம் செய்த அரசு அதிகாரி மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.மனித உரிமை மீறல்பெயர் நீக்கம் செய்த அதிகாரி மீது மனித உரிமை மீறல்செய்ததற்கு இழப்பீடு கோரியும் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் உரிய நடவடிக்கையை நீதிமன்றம் மூலம் எடுத்தால் எதிர்காலத்தில் இதுபோன்ற அநீதியை தடுக்க முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.