tamilnadu

img

பித்தக்குழாயிலிருந்த 1.5 செ.மீ கல் அறுவை சிகிச்சையின்றி அகற்றம்

சென்னை, ஏப். 11-பித்தக்குழாயின் விட்டம் சாதாரணமாக 6 மி.மீ, இதில் 1.5 செ.மீ கல்லை அறுவை சிகிச்சையின்றி அகற்றி 55 வயதான நோயாளிக்கு, ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை மருத்துவர்கள் சாதனை செய்தனர்.கடந்த ஏப்ரல் 1ஆம்தேதி தஞ்சை மாவட்டத்தைச்சேர்ந்த ஒருவர் மஞ்சள்காமாலை நோயுடன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை குடல் மருத்துவப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நோயாளியை பரிசோதித்ததில் அவருக்கு பெரிய 1.5 செ.மீ. அளவுள்ள ஒரு கல் பித்தக்குழாயில் அடைத்துக் கொண்டிருந்தது. அவருக்கு என்.ஆர்.சி.பி. என்ற சிகிச்சையின்மூலம் அறுவைசிகிக்சையின்றி குடல் உள் அகநோக்கிகுழாய் மூலம் அகற்ற முடிவு செய்யப்பட்டது. அவருக்கு இந்த சிகிச்சை மேற்கொள்வதில் சில சவால்கள் இருந்தது. அவருக்கு பிறப்பிலேயே உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் இடம் மாறியிருந்தது.அதாவது வலது பக்கம் இருக்க வேண்டிய அனைத்தும் இடது பக்கம் இருந்தது. சிறுகுடல் இடதுபக்கமாக திரும்பியும், கல்லீரல், பித்தப்பை ஆகியவை இடது பக்கமாகவும், மண்ணீரல் போன்றவைவலது பக்கமாகவும் இருந்தது.மேலும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மிகுந்த கவனத்துடன் நோயாளியின் வலது பக்கத்திலிருந்து குடல் உள் அக நோக்கி குழாயை செலுத்தி பித்தக்குழாயில் தேவையான உபகரணங்களை செலுத்தி பித்தகல் வெற்றிகரமாக அறுவைசிகிச்சையின்றி அகற்றப்பட்டது. நோயாளி நலமுடன் உள்ளார்.இந்த சிகிச்சை நமது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் பேராசிரியர் மருத்துவர் ஆர்.ஜெயந்தி அறிவுறுத்தலின் பேரில் இரைப்பை குடல் பிரிவின் மருத்துவர்கள் ஏ.ஆர். வெங்கடேஸ்வரன், டி.ராஜ்குமார், எம்.மலர்விழி, ஆர்.முரளி, செழியன் ஆகியோர் இந்த சிகிச்சையை சிறப்பாக மேற்கொண்டனர்.