tamilnadu

பரம்பாடி ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம் டிராக்டர்கள் மூலம் மண் விநியோகம் விவசாயிகள் ஆட்சியரிடம் மனு

தஞ்சாவூர், ஜூலை 13- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரு கே உள்ள கள்ளங்காடு - குருவிக்கரம்பை பர ம்பாடி ஏரியில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிர மிப்பு அகற்றும் பணி வட்டாட்சியர் க.ஜெய லெட்சுமி மேற்பார்வையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசா யிகள் கொன்றைக்காடு சுந்தர்ராஜன் தலை மையில், மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.  அம்மனுவில், “பரம்பாடி வடிகால் ஏரி யில் நீர்பிடிப்பு அற்ற பகுதியில் சுமார் 50 ஏழை  விவசாயிகள் 1948 ஆம் ஆண்டு ஆதீன ஒழிப்பு  சட்டத்திற்கு முன்பாக, மூன்று தலைமுறை களாக விவசாயம் செய்து வருகிறோம். தற்போது பேராவூரணி வட்டாட்சியர் எவ்வித  முன்னறிவிப்புமின்றி, பீமோ நோட்டீஸ் கொடுக்காமல், பரம்பாடி வடிகால் ஏரியை சர்வே செய்து, கரை உயர்த்தி ஆக்கிரமிப்பு அகற்றுவதாக கூறினார்.  

அதற்கு எங்களுடைய ஆட்சேபணையை தெரிவித்ததோடு அல்லாமல், ஆட்சேபணை மனுவையும் வட்டாட்சியரிடம் கொடுத்து ள்ளோம். இந்நிலையில் எங்களை வெளி யேற்றி விட்டு, தனியாருக்கு மண் விற்று வருகின்றனர். வட்டாட்சியரின் மேற்பார்வை யில் கடந்த 20 நாட்களாக நாளொன்றுக்கு 5  ஜேசிபி 40 டிராக்டர்கள் மூலம் ஏரியில் 15  அடி ஆழம் மண் தோண்டி எடுக்க ப்பட்டு பூக்கொல்லை, நாடாகாடு, கொன்றை க்காடு, கள்ளங்காடு இன்னும் பல கிராமங்க ளுக்கு வட்டாட்சியர் முன்னிலையில் ஆயி ரக்கணக்கான டிராக்டர்கள் மண் விநியோ கம் செய்து வருகிறார்கள்.  இதனால் பரம்பாடி ஏரி ஏழை விவசாயிகள்  வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே மாவட்ட ஆட்சியர் எஞ்சியி ருக்கும் நிலத்தில் மணல் எடுக்காமலும், தென்னை மரங்களை வெட்டாமலும், வாழ்வா தாரம் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர். அப்போது திமுக ஒன்றியப் பொறுப்பா ளர் க.அன்பழகன், தமிழ்நாடு விவசாயிகள்  சங்க மாவட்டச் செயலாளர் பா.பாலசுந்தரம், சிபிஐ பேராவூரணி ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் உடனிருந்தனர்.