tamilnadu

img

மினார்களை கட்டித் தரும் உள்ளூர் இந்து மக்கள்... மதவெறியர்கள் ஏற்றிய காவிக் கொடியும் அகற்றம்

மதவெறியர்கள் ஏற்றிய காவிக் கொடியும் அகற்றம் 

புதுதில்லி, மார்ச் 2- தில்லியில் சிஏஏ ஆத ரவுப் பேரணி என்ற பெயரில், பாஜக உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் பரிவாரங்களைச் சேர்ந்த வர்கள், இஸ்லாமியர்கள் மீது திட்டமிட்ட வன்முறையை அரங்கேற்றினர். கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி துவங்கி 4 நாட்கள் வரை நீடித்த இந்த வன்முறையில், 15 வயது சிறுவன் முதல் 85 வயது முதியவர்கள் வரை 46 பேர் துப்பாக்கியால் சுடப் பட்டும், தீ வைத்து எரிக்கப்பட்டும், இரும்புக் கம்பிகள், கட்டைகளால் அடித்தும் கொடூரமாக படுகொலை செய் யப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது, மசூதிகளும் தாக்குதலுக்கு உள்ளா கின. மினார்களில் காவிக்கொடி பறக்க விடப்பட்டன. குறிப்பாக, தில்லி அசோக் நகரில் உள்ள மசூதியின் மினாரில், ஆஞ்ச நேயர் உருவம் பொறித்த காவிக் கொடியை சங்-பரி வாரங்கள் ஏற்றின. இது ஊட கங்களில் வைரலானது. எனி னும், கடந்த ஒரு வாரமாக அந்தக் கொடி இறக்கப்படவில்லை. போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், ரவி என்ற இந்து இளைஞர், மினாரில் பறக்கவிடப்பட்ட காவிக் கொடி யை அகற்றியுள்ளார். அதே போல, இடிக்கப்பட்ட பள்ளி வாசல் மினார்களை மீண்டும் கட்டித்தரும் பணியிலும் அந்தந்த பகுதியில் வசிக்கும் இந்து மக்கள் ஈடுபட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் மீதான வன்முறை, மசூதி இடிப்பு போன்றவற்றுக்கும் தங்க ளுக்கும் சம்பந்தமில்லை என்று கூறும் அவர்கள், வெளியூரிலிருந்து இறக்கப் பட்ட இந்துத்துவா பேர்வழிகள்தான் வன்முறைக்குக் காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.