tamilnadu

img

புதிர் விளையாட்டு - மஞ்சு

டிக்கும்தானே?   இதோ இந்த வாரம் வடைப் புதிர். நீங்களாக யோசியுங்கள், விடை கண்டுடிபிடித்த பிறகு கீழே போய்ப் பாருங்கள், நீங்கள் கண்டுபிடித்தது சரியாக இருந்தாலும் சரி, தப்பாக இருந்தாலும் சரி வடை மாதிரி சுவையாக இருக்கும்!

அத்தனை பேருக்கு எத்தனை நிமிடங்கள்?  

ஒரு விருந்து நடந்துகொண்டிருந்தது. அதிலே சிறப்புப் பலகாரமே வடைதான். அது அவ்வளவு சுவையாக இருந்தது. நம் கயலும் கனியனும் சுற்றி வந்துகொண்டே ஒரு கணக்கெடுத்தார்கள். அதன்படி, மூன்று பேர் மூன்று வடைகள் சாப்பிட மூன்று நிமிடம் ஆனது. அப்படியானால் முப்பது பேர் முப்பது வடைகளை எவ்வளவு நேரத்தில் சாப்பிட்டிருப்பார்கள்? கயலும் கனியனும் கண்டுபிடித்தது என்ன?

விடைகள்

மூன்று  பேர் மூன்று நிமிடங்களில் முன்று வடைகள் சாப்பிட்டார்கள் என்றால், ஒவ்வொருவரும் ஒரு வடை சாப்பிட மூன்று நிமிடங்கள் எடுத்துக்கொண்டார்கள் என்று தெரிகிறது. ஆகவே முப்பது பேர் ஆளுக்கொரு வடை சாப்பிட அதே மூன்று நிமிடங்கள்தான் ஆகியிருக்கும். நாக்கில் வடை ருசி ஊற கண்டுபிடிக்க முயன்ற செல்லங்களுக்கு பாலர் பூங்கா வாழ்த்துகள்.