மின்மாற்றியை சுற்றியுள்ள புதரை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
செஞ்சி, டிச.30- செஞ்சி நகரத்தில் மின்மாற்றியை சுற்றி வளர்ந்துள்ள புதர் செடிகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் உள்ள நகர பகுதியில் பி-ஏரிக்கரை பகுதியில திண்டிவனம் – திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் இருந்து பீரங்கிமேடு பகுதிக்கு செல்லும் வழியில், பி.ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறுவதற்காக புதிதாக கட்டப்பட்ட பாலம் அருகே 25 கிலோவாட் திறன் கொண்ட மின்மாற்றி அமைந்துள்ளது. இந்த மின்மாற்றியை சுற்றிலும் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது இது மின் கம்பிகளை தொட்ட வண்ணம் உள்ளன, இதனால் தீ விபத்து உள்ளிட்ட அபாயங்கள் ஏற்படும் வாய்ப்பு அபாயம் உள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்வதாக கூறுகின்றனர், ஆனால் இதுவரை சரிசெய்யபடவில்லை, உடனடியாக சம்பந்தப்பட்ட மின்வாரியம் இதனை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர்.
