இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி.உஷாவின் கணவர் சீனிவாசன் (67) இன்று அதிகாலை உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டம் திக்கோடியில் வசிக்கும் சேர்ந்த பிரபல தடகள் வீரங்கனை மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி.உஷாவின் கணவரும், குறிப்பிடப்படுபவர். இவரது கணவர் சீனிவாசன் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வுபெற்று சீனிவாசன் இன்று அதிகாலை 1 மணி அளவில் மயங்கி கீழே விழுந்துள்ளார். குடும்பத்தினர் அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனிவாசனின் மறைவிற்கு, பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பி.டி.உஷாவின் கணவர் சீனிவாசன் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
தங்கள் அன்புக்குரியவரின் மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் பி.டி.உஷா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
