tamilnadu

img

மாடுகளுக்கு மைக்ரோ சிப் கட்டாயம் - சென்னை மாநகராட்சி கூட்டத்தில் முடிவு!

மாடுகளுக்கு உரிமம் பெறாத உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகாராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது
சென்னையில் மாடுகளால் ஏற்படும் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில், மாடுகளுக்கு உரிமம் பெறுதல் மற்றும் மைக்ரோ சிப் பொருத்துதல் கட்டாயம் என சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை பின்பற்றாத மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.25,000 வரை அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் உரிமையாளர்களின் மாடுகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாடுகளின் உரிமையாளர்கள் உரிமம் பெறுவதற்காக மார்ச் 18ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.