court

img

பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிவறைகள் மற்றும் இலவச நாப்கின் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு தனி கழிவறைகள் மற்றும் நாப்கின்கள் இலவசமாக வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஒன்றிய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை, நாட்டின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தக் கோரி, ஜெயா தாக்கூர் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில், நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு நாப்கின் இலவசமாக வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். மாதவிடாய் சுகாதார உரிமை என்பது அரசியலமைப்பின் 21-ஆவது பிரிவின்கீழ் வாழ்வதற்கான அடிப்படை உரிமையின் ஒரு பகுதியாகும். 
அதுமட்டுமின்றி நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற தனி கழிப்பறைகளை வழங்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பெண்களுக்குக் கழிப்பறைகள் மற்றும் இலவச சுகாதார நாப்கின்களை வழங்கத் தவறினால், அரசே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். தனியார் பள்ளிகள் வழங்கத் தவறும்பட்சத்தில், அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.