tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

படகு சவாரி மற்றும் நீச்சல் குளத்துடன் நகராட்சி சிறுவர் பூங்கா

கள்ளக்குறிச்சி, டிச. 31:  கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட ஏமப்பேர் பகுதியில் நகராட்சி சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்கா வில் 5 படகுகளுடன் கூடிய படகு சவாரி, 2 சிறுவர் நீச்சல் குளங்கள், சிறிய செயற்கை மலை அருவி, நடைப் பயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதை, 4 ஊஞ்சல்கள் மற்றும் சிறுவர்கள் சறுக்கி விளையாடும் விளை யாட்டுச் சாதனங்கள் எனப் பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடு முறை அளிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் இங்கு வந்து படகு சவாரி செய்தும், நீச்சல் குளத்தில் குளித்தும், ஊஞ்சல் மற்றும் செயற்கை அருவி யில் விளையாடியும் மகிழ்ந்து வருகின்றனர். இப்பூங்கா விற்கு நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 10, இருசக்கர வாகன நிறுத்தக் கட்டணமாக ரூ. 5 வசூ லிக்கப்படுகிறது. மேலும், சிறுவர் நீச்சல் குளத்தில் அரை மணி நேரம் குளிப்பதற்கு ஒரு நபருக்கு ரூ. 25ம், படகு சவாரியில் ஒரு படகில் 4 பேர் அரை மணி நேரம் பயணம் செய்ய ரூ. 100-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

பழங்குடியின குடும்பங்களுக்கு  300 ஆடுகள் வழங்கல்

சென்னை, டிச.31- தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மீஞ்சூர் ஒன்றியத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கின. இதன்படி தத்தைமஞ்சி, மெதூர், பழவேற்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 75 பழங்குடியின குடும்பங்களுக்கு, தலா 4 ஆடுகள் வீதம் மொத்தம் 300 ஆடுகளும், 50 கிலோ தீவனமும் வழங்கப்பட்டன. செங்கல்பட்டு பொத்தேரி கால்நடை மருத்துவமனைப் பேராசிரியர் டாக்டர் ரூபா நந்தினி மற்றும் முன்னாள் ஊராட்சித் தலைவர் செல்வி ஆகியோர் இந்த ஆடு களை வழங்கினர். இத்திட்டத்தின் சிறப்பம்சமாக, வழங்கப்பட்ட ஆடுகளுக்கு ஓராண்டு காலத்திற்குத் தேவையான மருத்துவச் சேவைகளை அரசு கால்நடை மருத்துவமனையே இலவசமாக வழங்க உள்ளது. இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

சென்னை, டிச. 31- சென்னை வளசரவாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை செய்கின்றனர். வளசரவாக்கம், காமராஜர் அவென்யூ பகுதியைச் சேர்ந்த ஜோதிராஜ் மகன் வீரகுமார் (15). இவர், மதுர வாயல் ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் செவ்வாய்க்கிழமை அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பர் யோகேஷ்வரன் வீட்டுக்கு விளையாடச் சென்றார். அங்கு நண்பர்கள் இருவரும் 2ஆவது மாடி யில் நின்று விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கைப்பிடி சுவர் அருகே சென்ற மின்சார வயர் மீது வீர குமாரின் கை எதிர்பாராத விதமாக உரசியது. இதில் தூக்கி வீசப்பட்ட வீரகுமாரை, அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலத்தக் காயமடைந்த வீரகுமாரை பரிசோதித்த மருத்து வர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர்.