tamilnadu

img

பணிபறிப்பு, ஊதியம் வழங்காததை கண்டித்து காவிரி தொலைக்காட்சி ஊழியர்கள் போராட்டம்

சென்னை, ஆக. 24 - ஊதியம் கேட்கச் சென்ற பெண் ஊழியர்களை காவேரி தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் தாக்கி யுள்ளார். இதனைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். காவேரி நியூஸ் தொலைக்காட்சி அலுவல கம் கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 150 பேர் பணியாற்றி வந்தனர். 2 மாத ஊதியத்தை வழங்கா மல், சட்டப்படி முன்னறிவிப்பு மின்றி, சட்டவிரோதமாக ஆக.9 அன்று தொலை க்காட்சி நிறுவனத்தை நிர்வாகம் மூடுவதாக அறிவித்து. இதற்கு ஊழியர்கள எதிரப்பு தெரிவித்ததை யடுத்து, 2 மாத ஊதிய நிலுவையுடன், மேலும் 2 மாத ஊதியத்தை சேர்த்து இழப்பீடாக வழங்கப்படும் என்று நிர்வாகம் கூறியது. அதன்படி ஊதியத்தையும், இழப்பீட்டையும் வழங்க வில்லை. எனவே, ஊழி யர்கள் சனிக்கிழமையன்று (ஆக.24) அண்ணாநகரில் உள்ள நிர்வாக இயக்குநர் இளங்கோவனை சந்தித்து முறையிட்டனர். ஊதியம் தருவதற்கான தேதியை உறுதியாக கூறமுடியாது என்று அவர் பதிலளித்துள்ளார். அவ்வாறெனில், எழுத்துப் பூர்வமாக பதில் தர வேண்டும். இல்லா விடில் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறியுள்ள னர். அதற்கு இளங்கோவன், “எனது அலுவலக காவலா ளிக்கு 6 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருகிறேன். அந்த பணம் மிச்சமாகட்டும், நீங்கள் காவலுக்கு இருங்கள். எப்போது சம்பளம் கொடுக்க முடியும் என்பது தெரியாது. இங்கு காத்திருப்பது வீண்” என்று பதிலளித்துள்ளார். இதனையடுத்து ஊழி யர்கள் வாசலில் காத்திருந்த னர். அப்போது வெளியே செல்ல முற்பட்ட நிர்வாக இயக்குநர் நின்று கொண்டி ருந்த பெண் ஊழியர்களை தள்ளிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து ஊழியர்கள் அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தி னர்.