நிலப்பட்டா வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
கடலூர், ஜன. 12- ஐந்து தலைமுறையாக அனுபவித்து வரும் நிலத்திற்கு நிலப் பட்டா வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொடுக்கம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த மலையடிகுப்பம், வெ.பெத்தாங் குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் தரிசு நிலத்தில் சாகுபடி செய்து வரும் விவ சாயிகளுக்குப் பட்டா வழங்க வேண்டும், விவசாயிகளை மிரட்டி 9,000 முந்திரி மரங்களை அழித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், காலணி தொழிற்சாலையை வேறு இடத்தில் அமைக்கவும், ஓராண்டு காலமாகப் போராடி வரும் விவ சாயிகளுக்குத் தீர்வு காணவும் கோரப்பட்டது. மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.தட்சிணாமூர்த்தி தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, சிஐடியூ மாவட்ட தலைவர் பி.கருப்பையன், மாவட்ட செய லாளர் டி.பழனிவேல், விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் ஆர்.கே.சரவணன், பொருளாளர் ஆர்.ராமச்சந்திரன், துணை தலைவர் ஜெ.ராஜேஷ்கண்ணன், விவ சாய தொழிலாளர் சங்கம் மாவட்ட தலை வர்கள் எஸ்.பிரகாஷ், டி.கிருஷ்ணன், பழ.வாஞ்சிநாதன், மாதர் சங்கம் அம்சாயாள், சிபிஎம் கடலூர் மாநகர செய லாளர் ஆர்.அமர்நாத், ஒன்றிய செயலாளர் ஆர்.பஞ்சாட்சரம், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.வினோத்குமார், கடலூர் குடியிருப்போர் சங்க பொதுச் செயலாளர். பி.வெங்கடேசன், சிறப்புத் தலைவர் எம்.மருதவாணன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கே.பி. சௌமியா உள்ளிட்ட பலர் கோரிக்கை வலியுறுத்தி பேசினார்கள். மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து கோரிக்கைகள் குறித்து மனு அளித்து பேசினர்.
