tamilnadu

img

சமுதாயக் கூடத்தைத் திறக்க வலியுறுத்தி போராட்டம் வட்டாட்சியர் உறுதியளித்ததை அடுத்து ஒத்திவைப்பு

சமுதாயக் கூடத்தைத் திறக்க வலியுறுத்தி போராட்டம் வட்டாட்சியர் உறுதியளித்ததை அடுத்து ஒத்திவைப்பு

கிருஷ்ணகிரி, டிச.31-  மத்திகிரி சமுதாயக் கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வலி யுறுத்தி நடைபெற்ற காத்திருப்புப் போராட்டம், வட்டாட்சியர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 2009-ஆம் ஆண்டு கட்டப்பட்ட மத்திகிரி சமுதாயக் கூடத்தை அரசு அலுவலகமாகவோ அல்லது குப்பைக் கிடங்காகவோ மாற்றும் முயற்சியை எதிர்த்து, அதனைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கே வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வந்தது. மேலும் எடையநல்லூர் பள்ளிக் கட்டடம், கால்நடை மருத்துவமனை ஆகிய வற்றையும் திறக்க வேண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், தொழிற்சாலை கழிவுகளால் நீர்நிலைகள் மாசடைவதைத் தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மத்திகிரி சமுதாயக் கூடம் முன்பு செவ்வாய்க்கிழமை (டிச. 30) காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. அதிகாரிகளுடனான பேச்சு வார்த்தை யில் உடன்பாடு ஏற்படாததால் இரவிலும் போராட்டம் நீடித்தது. பின்னர் இரவு 9:30 மணிக்கு ஓசூர் வட்டாட்சியர் குண சிவா நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, 10 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சி யருடன் ஆலோசித்துத் தீர்வு காண்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தார். இதனை ஏற்றுப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஆர். பத்ரி, மாவட்டச் செய லாளர் சுரேஷ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். வெண்ணிலா நன்றி கூறினார்.