tamilnadu

img

பருவகாலப் பணியாளர்களை நிரந்தரம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

பருவகாலப் பணியாளர்களை  நிரந்தரம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர், டிச.31-  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்திச் சிஐடியு சங்கத்தின் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பொது விநியோகத் திட்டத்தைப் பலப்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஒப்பந்தத்தின்படி பருவகாலப் பணியாளர்களை நிரந்தரம் செய்தல், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குத் தளவாடப் பொருட்களை நிர்வாகமே நேரடியாக வழங்குதல், தரமான சாக்குகளை விநியோகித்தல் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு இடமாறுதல் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மேலும், பருவகாலப் பணியாளர்களை அவர்கள் வசிக்கும் அருகாமையில் உள்ள தாலுகாக்களிலேயே பணியமர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. சங்கத்தின் மண்டலத் தலைவர் ச. கலைவாணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஜி. சங்கர், எஸ். பீமாராவ் பாபுஜி, தினகரன், கே.செந்தில்குமார், பி. வாசுதேவன், கே.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாநிலப் பொதுச் செயலாளர் ஆர். புவனேஸ்வரன், சிஐடியு மாவட்டத் தலைவர் பி. கருப்பையன், மாவட்டச் செயலாளர் டி. பழனிவேல், மாநிலச் செயலாளர் ஆர். இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.