tamilnadu

img

டிரம்ப்பின் உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டம்

டிரம்ப்பின் உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டம்

வெனிசுலாவின் அதிபரை அத்துமீறி கைது செய்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்தும், மதுரோ மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பழவேற்காடு பஜாரில் செவ்வாயன்று (ஜன.6), டிரம்ப்பின் உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வாலிபர் சங்கத்தின் மீஞ்சூர் பகுதி தலைவர்  ஆர்.அகிலன்  தலைமை தாங்கினார். இதில் வாலிபர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர்  ஜி.அரவிந்தசாமி,  மாவட்ட செயலாளர் வி.விநாயகமூர்த்தி, தலைவர் டி.மதன், துணை தலைவர் வசந்த் பௌத்த, மீஞ்சூர் பகுதி செயலாளர் எம்.சிவா, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சஞ்சய்குமார், மாதர் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் சரளா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.