tamilnadu

img

பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்திடுக...

சென்னை:
பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

\திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 14 வயது சிறுவன் 9 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுசெய்ய முயன்று கொலை செய்த நிகழ்வு நம்மைஅதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்த விசாரணையில இணையதளங்களில் ஆபாச வீடியோக்களை பார்த்ததன் காரணமாக சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்ததாகவும், பெற்றோரிடம் சொல்லிவிடுவேன் என்று சிறுமி தெரிவித்ததால் கொலை செய்ததாகவும் அந்த சிறுவன் தெரிவித்துள்ளான். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை அருகே 13 வயது சிறுமி படுகொலைசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் நிகழ்ந்து பல நாட்கள் கடந்த பின்னரும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற இளம்பெண்கள் சந்தேக மரண வழக்குகள் தற்கொலை வழக்குகளாக மாற்றி முடித்துவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 13 வயது சிறுமியின் கொலை வழக்கில் காவல்துறை விசாரணை போதுமான அக்கறையுடன் நடத்தப்படவில்லை.

கடந்த ஆண்டு பொள்ளாச்சியில் ஒருகும்பலால் இளம்பெண்கள் மீது குறிவைத்து நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை நிகழ்வுகளில் குற்றவாளிகளை தண்டிப்பதில் தமிழக அரசு போதுமான அக்கறை காட்டவில்லை என்பது மட்டுமின்றி குற்றவாளிகள் தப்பிக்கஉதவும் வகையிலேயே அரசின் நட வடிக்கை இருந்தது. இந்நிலையில் கன்னியாகுமரிமாவட்டத்தில் காசி என்பவன் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பெண்களை ஏமாற்றி, வீடியோ எடுத்து மிரட்டி பணம் வசூலித்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இது குறித்து பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்தபுகாரின் அடிப்படையில் விசாரித்த காவல்துறைகாசியை குண்டர் சட்டத்தில் கைதுசெய்துள்ளது. அதே நேரம் இந்த வழக்கு விசாரணையில் காவல்துறை தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது. காசியுடன் தொடர்புடைய குற்றவாளி களை கைது செய்வதற்குப் பதிலாக புகார் கொடுத்தவர்களை அலைக்கழிக்கும் வேலையைத்தான் காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. 

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காகஅமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் குடும்ப வன்முறை நிகழ்வுகள் அதிகரித்துள்ள தாக தமிழகத்தின் மகளிர் ஆணையத் தலைவரே குறிப்பிட்டுள்ளார்.  குறிப்பாக ஊரடங்கால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறந்த பிறகு குடும்ப வன்முறைகள் மேலும் அதிகரித்துள்ள தாக செய்திகள் வருகின்றன. பெண்கள் மற்றும்குழந்தைகள் மீது வன்முறையை நிகழ்த்தும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதிலும், குற்றங்கள் நிகழாமல் தடுப்பதிலும் தமிழக அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டியே வருகிறது. இது குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கிறது. 

எனவே, தமிழக முதல்வர் இப்பிரச்சனை களில் நேரடியாகத் தலையிட்டு பெண்கள்மற்றும் பெண்குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்த வழக்கு விசாரணைகளை துரிதமாக நடத்திடவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்தவும் வேண்டும்.பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் மீதானவன்முறைகள் மேலும் தொடராமல் தடுப்பத ற்கான நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.