tamilnadu

img

ஜன்.3-இல் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்!

2025 ஜனவரி 3ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், 2025 ஜனவரி 3ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
வரும் ஜனவரி 9-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். ஒரு நாளுக்கு 200 குடும்ப அட்டைதாரர்கள் பரிசுத் தொகுப்பு பெறும் வகையில் டோக்கன் வழங்கப்பட உள்ளது.