பொங்கல் திருவிழா: விளையாட்டுப் போட்டி
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் கசிநாயக்கன்பட்டி பகுதியில் திமுக சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்குக் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மோகன்ராஜ் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன், ஒன்றிய துணைச் செயலாளர் சீனிவாசன், பள்ளித் தலைமை ஆசிரியர் குழந்தைசாமி, மாவட்டச் சுற்றுச்சூழல் அணி நிர்வாகி ஓம் பிரகாஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
