tamilnadu

img

சென்னை மெட்ரோ ரயில்: 3-ஆம் வழித்தடத்துக்கு ஒப்புதல்

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணியில், 3-ஆம் வழித்தடம் அமைக்க ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த மெட்ரோ ரயில் திட்டப்பணிகளில் தற்போது 3-ஆம் வழித்தடத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்க, ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 
இந்த வழித்தடமானது, மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 45.8 கி.மீட்டருக்கு அமைகிறது.  பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு எல்லையில் இத்திட்டம் அமைகிறது.