இலவச குடிமனை பட்டா கேட்டு திருவொற்றியூர் வட்டாட்சியரிடம் மனு
சென்னை, ஜன. 13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவொற்றியூர், மணலி பகுதிக்குழுக்கள் சார்பில் இலவச குடிமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டாட்சி யர் திலீப்பிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் திருவொற்றியூர் பகுதிகுட்பட்ட காமராஜர் நகர் (33 மனுக்கள்), ராதா கிருஷ்ணன் நகர் (84), குமரப்பா நகர் (22), கார்கில் நகர் (330), ராஜாஜி நகர் (153), ராமநாதபுரம் (126), எர்ணீஸ்வரன் நகர் (50), சாஸ்திரி நகர் (3), வள்ளு வர் நகர் (229), ஏஜஆர் நகர் (22), டிகேபி நகர் (12), அசோக் நகர் (1), எர்ணாவூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு (185), சடை யங்குப்பம் (1), சின்ன மேட்டுப்பாளையம் (16), ஈசானி முத்து கோவில் தெரு (115), அம்சா தோட்டம் (28), சன்னதி தெரு (104), எர்ணீஸ்வரன் நகர், மாகாளியம்மன் நகர் (13), வி.பி.நகர் (49), மணலி பகுதிக்குட்பட்ட பெரிய தோப்பு, சின்ன சேக்காடு (383) ஆகிய ஊர்களில் இருந்து பொதுமக்களிடம் பெறப்பட்ட மொத்தம் 1,959 மனுக்கள் வட்டாட்சியரிடம் வழங்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தர ராஜன், மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.பாக்கியலட்சுமி, எஸ்.ராணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.கதிர்வேல், டி.பாபு, எம்.கோடீஸ்வரி, நிர்வாகி கள் அருமைராஜ், அல மேலு, சுரேஷ் பாபு, வெங்க டையா, அன்பு, கஸ்தூரி, ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
