சென்னை:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப் பட்டன.கொரோன வைரஸ் பரவல் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து வழிப்பாட்டுத் தலங்களையும் அரசு மூட உத்தரவிட்டது. புதிதாக பதவியேற்றுள்ள திமுக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் தொற் றின் வேகம் குறைந்து பாதிப்போர் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள் ளது. இதனால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் அனைத்து மத வழிப்பாட்டு தலங்களையும் ஜூன் 28 ஆம் தேதி முதல் திறப்பதற்கு அரசு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து வழிப்பாட்டு தலங்கள் திறக்கப்பட்டன.
வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வோர் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரைக்கும் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். கோவிலில் இருக்கும் சிலைகளை பக்தர்கள் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது. விபூதி, குங்குமம் மற்றும் இதர பிரசாதங்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும். அர்ச்சனைச் காக பூ, பழம், தேங்காய் கொண்டு செல்ல அனுமதிக்கூடாது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.