tamilnadu

img

தனியார் துறையிலிருந்து அதிகாரிகள்  நியமனத்திற்கு கண்டனம்....

சென்னை:
மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு கூட்டுச் செயலாளர்களாக தனியார் துறைகளிலிருந்து 30 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிகண்டனம் தெரிவித்துள் ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசின் முக்கிய இலாக்காக்களை நிர்வகிக்கும் கூட்டுச் செயலாளர்கள் (Joint Secretary) என்ற பொறுப்பிற்கு முப்பது பேரை, தனியார் துறையிலிருந்தும், வெளியி லிருந்தும் மத்திய அரசே தேர்வு செய்து நேரடியாகநியமனம் செய்வது சமூகநீதிக்கோ, இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கோ உடன்பட்டதில்லை.அரசமைப்புச் சட்டத்தின்பிரிவு 315 இன் கூற்றுப்படி (Article 315) மத்திய - மாநில அரசுகளின் அதிகாரிகள் நியமனங்களை, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனோ அல்லது மாநில சர்வீஸ் கமிஷனோதான் நியமிக்க வேண்டும். அதுதான் சட்ட விதிமுறை. காலங்காலமாய் கடைப்பிடித்து வரும் நடைமுறை. அவற்றின் சுத ந்திரமும் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும்.மத்திய அரசே தேர்வு செய்து நேரடியாக எடுத்தஎடுப்பில் கூட்டுச் செயலாளராக நியமித்து (பிறகு செயலாளராகவும் நிர்வாகத்தையே முழுதாக நடத்தும்நிலையும்கூட ஏற்படும்) விடுவது, நடுவில் ஊடுருவுவது என்பது அரசமைப்புச் சட்டப்படியும், நியாயப்படி யும் ஏற்கத்தக்கதல்ல. இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.