districts

அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியில் இடஒதுக்கீடு தேவை: கி.வீரமணி

சென்னை, ஜூன் 26 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியை தமிழ்நாடு அரசு அதன் அறநிலையத்  துறை மூலம் - 15 ஆண்டு என்ற நீண்ட இடைவெளிக்குப் பின்னால் - துவக்கவிருக்கும் அறிவிப்பை திராவி டர் கழக தலைவர் கி.வீரமணி வர வேற்றுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்  முந்தைய கலைஞர் ஆட்சியில் தொடங்கி நடத்தப்பெற்ற 69 சதவிகித இடஒதுக்கீடு அடிப் படையில்  அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் அனைத்து  சாதி மாணவர்கள், ஆதி திராவிடர் உள்பட அனைவரையும் தேர்வு செய்து, ஆகமப் பயிற்சி அளிக்கப்படவேண்டும்.  ஏற்கெனவே நியமனங்கள் பெறாத பயிற்சி பெற்றவர்களை அப்பொறுப் பில் நியமித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு,  வழிகாட்டுதல்படி அனைத்துப் பெரிய கோவில்கள் உள்பட எல்லாவிடங்களிலும் இந்த அர்ச்சகர் கள் சாதி வேறுபாடு இன்றி, பூஜை, புனஸ்காரங்கள் செய்யவேண்டும்.   இந்த கல்லூரிகளை இனி தொடர்ச்சி யாக தமிழ்நாடு அரசால் நடத்த வேண்டும். தமிழ் அர்ச்சனைக்காகவும் இவர்களுக்கு தனிப் பயிற்சி தருவதும் அவசியம் என்றும் அவர் குறிபிட்டுள்ளார்.