சென்னை:
“124-ஏ பிரிவு மட்டுமல்ல, மற்ற பல பிரிவுகள் பழைய ரவுலட் சட்டத்தின் மறுபதிப்பு கிரிமினல் லா அமெண் மெண்ட் என்ற ‘புதிய அவதாரமாகவே’ வந்துள்ளன. மேலும் பல சட்டப் பிரிவுகளும் காலனிய அரசின் சட் டங்கள், காலாவதியாக வேண்டிய சட்டங்கள் என்று தீர்ப்புகள் வரவேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும்” என்று கி.வீரமணி அறிக்கை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகும் நிலையில்கூட இன்னமும் அரசுகள்தங்களை எதிர்ப்பவர்களை அடக்கி ஒடுக்க உடனடியாக 124-ஏ பிரிவு சட்டப் பிரிவை தவறாகப் பயன்படுத்துகின்றன. இந்த சட்டங்கள் தனி நபரும், கட்சிகளும் இயங்குவதற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன.தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66-ஏ பிரிவு சட்டம் செல்லாது என்று நீதிமன் றம் தீர்ப்பளித்த பின்பும்கூட, அச்சட்டத்தை பல முறை பயன்படுத்தி அப்பாவி மக் கள் தண்டிக்கப்படுகிறார் கள். கிராமத்தில் ஒரு காவல் துறை அதிகாரி யாரையாவது தண்டிக்க விரும்பினால், உடனடியாக அவர் மீது இ.பி.கோ.124-ஏ பிரிவு ஏவப்படுகிறது. சுமார் 59 ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றம் அளித்த கேதார்நாத் வழக்கில் 124-ஏ பிரிவு செல்லும் என்று
அளிக்கப்பட்டத் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் தற்போது தொடரப்பட்டுள்ள புதிய வழக்குகள் மூலம் மறு ஆய் வுக்கும், புதிய பார்வைக்கும் உள்ளாகியுள்ளது.124-ஏ பிரிவு மட்டுமல்ல - மற்ற பல பிரிவுகள் - பழைய ரவுலட் சட்டத்தின் மறுபதிப்பு - குற்றவியல் சட்டதிருத்தம் என்ற ‘புதிய அவதாரமாகவே’ வந்துள்ளவை முதல் பல சட்டப் பிரிவுகளும் காலனிய அரசின் சட் டங்களாகும். காலாவதியாக வேண்டிய சட்டங்கள் குறித்து நீதிமன்றங்கள் முடிவெடுக்கவேண்டியது காலத் தின் கட்டாயமாகும்.இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.