tamilnadu

img

மாணவர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டம் உதயம்

சென்னை, பிப். 8 - இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டக்குழு உதயமானது. மாணவர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட அமைப்பு மாநாடு சனிக்கி ழமையன்று (பிப்.8) சிந்தாத ரிப்பேட்டையில் நடை பெற்றது. பல்கலைக் கழகம், கல்லூரி, பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட னர்.  மாநாட்டிற்கு ரா.அருண் தலைமை தாங்கினார். சி.மிருதுளா வரவேற்றார். ர.யுகசாந்தி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரா.திருமூர்த்தி மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். லோ. விக்னேஷ் எதிர்காலப் பணி கள் குறித்து விவரித்தார். மாணவர் சங்க மத்தியக் குழு உறுப்பினர் ஜான்சி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.மஞ்சுளா உள்ளிட்டோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். மாணவர் சங்க மாநிலச் செயலாளர் வீ.மாரி யப்பன் நிறைவுரையாற்றி னார். ரா.யுவஸ்ரீ நன்றி கூறி னார்.
நிர்வாகிகள்
25 பேர் கொண்ட மாவட்டக்குழுவின் தலைவ ராக சி.மிருதுளா, செயலாள ராக லோ.விக்னேஷ் ஆகி யோர் தேர்ந்தெடுக்கப்பட்ட னர்.