districts

img

காலமானார்

சென்னை, ஆக. 7- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மத்திய சென்னை மாவட்டத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினருமான ப.தேவராஜ் மனைவி டி, பானுமதி (66) வெள்ளியன்று (ஆக. 6) காலமானார். கொளத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டி ருந்த அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்மு கம், எம்.ராமகிருஷ்ணன், கார்த்திஷ்குமார், மாவட்டக் குழு  உறுப்பினர் தமிழ்செல்வி, கொளத்தூர் பகுதி செயலாளர் ஹேமாவதி, மாதவரம் பகுதிச் செயலாளர் வி.கமலநாதன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலை வர் த.வெள்ளையன், வடசென்னை மாவட்டத் தலைவர் வியாசை மணி, வியபாரிகள் பாதுகாப்பு பேரவை தலைவர்  ராஜா சவுந்தர்ராஜன், முன்னாள் பொதுச் செயலாளர் கே. தேவராஜ், ஆல்பர்ட், சிவமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் கொளத்தூரில் உள்ள இடுகாட்டில் சனிக்  கிழமை (ஆக. 7) மாலை அடக்கம் செய்யப்பட்டது.