tamilnadu

img

வடசென்னை கணேசபுரம் பாலம் ஜூலை 2026-க்குள் நிறைவடையும்!

வடசென்னை கணேசபுரம் பாலம்  ஜூலை 2026-க்குள் நிறைவடையும்!

சென்னை,ஜன.7- வடசென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளில் முக்கிய முன்னேற்றமாக, கணேசபுரம் மேம்பாலத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.  சென்னை மாநகராட்சி மற்றும் ரயில்வே இணைந்து ரூ.226 கோடி மதிப்பில் அமைக்கும் இந்த நான்கு வழி மேம்பாலத்தின் 65 சதவீதப் பணிகள் முடிந்துள்ள நிலையில், வரும் ஜூலை 2026-க்குள் இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பெரம்பூர், புரசைவாக்கம் மற்றும் புலியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். அதேபோல், கொளத்தூர் மற்றும் கொருக்குப்பேட்டை இடையேயான லெவல் கிராசிங் 2பி மேம்பாலம் ஜனவரி 20-ஆம் தேதியும், கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சின்ன நந்தம்பாக்கம் பாலம் பிப்ரவரி முதல் வாரத்திலும் திறக்கப்பட உள்ளன. மேலும், லெவல் கிராசிங் 2A மற்றும் வேளச்சேரி மேம்பாலப் பணிகளுக்கான டெண்டர் அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிடப்பட்டு, கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இத்திட்டங்கள் அனைத்தும் சென்னையின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, பொதுமக்களின் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கும்.